உலகச்செய்திகள்

பிரேசின் காட்டுத் தீ சம்பவங்கள்: 1.7 கோடி உயிரினங்கள் பலி – மனித குலத்துக்கான எச்சரிக்கை

2020ஆம் ஆண்டின் இருளுக்கு மத்தியில் பிரேசிலில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முக்கிய ஆய்வின் கவலை தரும் முடிவை அறிவித்துள்ளனர்.

பன்டானல் நீர்நிலை பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவத்தால் எத்தனை உயிரினங்கள் அழிந்தன என்பதுதான் அந்த ஆய்வு. இந்த ஆய்வில் ஊர்வன, பறவைகள் மற்றும் ப்ரைமேட் வகை விலங்களுகள் என மொத்தம் 1.7 கோடி உயிரினங்கள் உயிரிழந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.

ஜனவரி மற்றும் நவம்பர் மாத இடைவெளியில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களில் உலகின் மிகப்பெரிய நீர்நிலை பகுதியின் 30 சதவீதம் அழிந்துவிட்டது. சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய நிதியமான டபள்யூ. டபள்யூ. எஃப். பிரேசிலின் ஹெட் ஆஃப் சயின்ஸ், மரியானா நபோலிடானா ஃப்ரைய்ரா 2020ஆம் ஆண்டு 22 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதைதான் இந்த ஆய்வு கோடிட்டு காட்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.