விளையாட்டு

மீண்டும் ஊரடங்கு? பீதியில் மக்கள்; முதல்ல இருந்து ஆடும் கொரோனா!

அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அதை தடுக்கும் வகையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என, தகவல் வெளியாகி இருக்கிறது.

சீனா நாட்டின் ஊகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுவரையில் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றுக்கு இரையாகி உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சிறு, குறு மற்றும் பெரிய தொழில் வரை பாதிக்கப்பட்டு உலக நாடுகள் பலவும் பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன.

பல்வேறு அலைகளாக உருமாற்றம் அடைந்த கொரோனோ தொற்று உலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு தற்போது சிறிது ஓய்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் கொஞ்சம் நிம்மதி அடைந்தன.

இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பரவ துவங்கி இருப்பது உலக நாடுகளிடையே பீதியை கிளப்பி உள்ளது. கடந்த சில மாதங்களாக சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது.

தற்போது சீன தலைநகரான பீஜிங்கில் கொரோனா தொற்று வேகம் எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது கொரோனா நோய் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.

நேற்று முன்தினம் 11,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 13,167 பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவி ஊரடங்கை அமல்படுத்த செய்துவிடுமோ? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.