Business

வருமான வரி செலுத்துவோருக்கு சிக்கல்.. மத்திய அரசு உத்தரவு!

வருமான வரி இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு.

வருமான வரித் துறையின் புதிய இணையதளம் கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இணையதளத்தை இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம் வடிவமைத்தது. அறிமுகமான தொடக்கத்தில் இருந்தே வருமான வரித் துறை புதிய இணையதளத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, வருமான வரித் துறை இணையதளத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. பின்னர் படிப்படியாக தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டன. வருமான வரித் தாக்கல் செய்வதற்கும் கூடுதல் கால அவகாசம் வழங்கியது வருமான வரித் துறை. இந்நிலையில், புதிய வருமான வரி இணையதளம் அறிமுகமாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் வருமான வரி இணையதளத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. மேலும், வருமான வரி இணையதளம் முடக்கப்பட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின.